கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

Updated On :1 ஜூலை 2020, 10:41 am

DIN


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது:

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு காவலர் பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ள காவலர்கள் எண்ணிக்கை 1,015 ஆகவும், பலியான காவலர்கள் எண்ணிக்கை 60 ஆகவும் உயர்ந்துள்ளது.

மார்ச் 22 முதல் இன்றைய தேதி வரை மொத்தம் 29,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 86,301 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ. 9,95,52,511 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளன.

காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக 290 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தக் குற்றத்துக்காக 860 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 86 காவலர்கள் காயமடைந்துள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 54 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.