மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராஜஸ்தான் எம்எல்ஏ-க்கள் தங்கியிருப்பதற்கும், ஹரியாணா அரசுக்கும் தொடர்பு இல்லை: முதல்வர் கட்டர்

​ராஜஸ்தான் எம்எல்ஏ-க்கள் ஹரியாணாவில் தங்கியிருப்பதற்கு, ஹரியாணா அரசுக்கும் எவ்விதப் பங்கும் இல்லை என அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.

News image
​ராஜஸ்தான் எம்எல்ஏ-க்கள் ஹரியாணாவில் தங்கியிருப்பதற்கு, ஹரியாணா அரசுக்கும் எவ்விதப் பங்கும் இல்லை என அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.
Updated On :15 ஜூலை 2020, 12:45 pm

DIN


ராஜஸ்தான் எம்எல்ஏ-க்கள் ஹரியாணாவில் தங்கியிருப்பதற்கு, ஹரியாணா அரசுக்கும் எவ்விதப் பங்கும் இல்லை என அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மனேசரிலுள்ள விடுதியில் தங்கியிருப்பது குறித்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டரிடம் கேள்வியெழுப்பட்டது. இதற்குப் பதிலளித்த கட்டர், "தனியார் விடுதிகளில் யார் வேண்டுமானாலும் தங்கலாம். இதில் ஹரியாணா அரசுக்கு எவ்விதப் பங்கும் இல்லை" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தான் பாஜகவில் இணையப்போவதில்லை என சச்சின் பைலட் இன்று (புதன்கிழமை) காலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா இதுபற்றி தெரிவிக்கையில், "பாஜகவில் இணையப்போவதில்லையெனில், ஹரியாணா அரசின் பாதுகாப்பிலிருந்து வெளியேறி ஜெய்ப்பூர் திரும்ப வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிலையில், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.