மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாஜகவில் இணையுமாறு சச்சின் பைலட் எனக்கு பணம் கொடுத்தார்: காங்கிரஸ் எம்எல்ஏ

​பாஜகவில் இணையுமாறு சச்சின் பைலட் தனக்கு பணம் கொடுத்ததாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ கிரிராஜ் சிங் மலிங்கா குற்றம்சாட்டியுள்ளார்.

News image
​பாஜகவில் சேரச் சொல்லி சச்சின் பைலட் தனக்கு பணம் கொடுத்ததாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ கிரிராஜ் சிங் மலிங்கா குற்றம்சாட்டியுள்ளார். (கோப்புப்படம்)
Updated On :20 ஜூலை 2020, 10:50 am

DIN


பாஜகவில் இணையுமாறு சச்சின் பைலட் தனக்கு பணம் கொடுத்ததாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ கிரிராஜ் சிங் மலிங்கா குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த மலிங்கா தெரிவித்ததாவது:

"நான் சச்சின் பைலட்டுடன் பேசினேன். பாஜகவில் சேர அவர் எனக்குப் பணம் கொடுத்தார். ஆனால், நான் பாஜகவில் சேர முடியாது என்று மறுத்துவிட்டேன். எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால்கூட நான் பாஜகவில் இணைய மாட்டேன்.

எனது பகுதி மக்களை நான் எப்படி எதிர்கொள்வேன்? அவர்களிடம் என்ன சொல்வேன் நான்?" என்றார் மலிங்கா.

இதைத் தொடர்ந்து, சச்சின் பைலட் பணம் கொடுத்தபோதே இதை ஏன் எழுப்பவில்லை என்று கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், "மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன்பு, இந்த அரசைக் கவிழ்ப்பதற்கான சதித் திட்டம் தீட்டப்படுவதாக அசோக் கெலாட்டை எச்சரித்தேன். நான் முதல்வரிடம் எந்தவொரு ஆடியோவையும் கொடுக்கவில்லை. எனக்கு ஆடியோவை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்றுகூட தெரியாது. எந்தவொரு விசாரணை அமைப்புக்கும் முன்பும் ஆஜராக நான் தயார்." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.