கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கேரளத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா? திங்களன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்

​கேரளத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது பற்றி முடிவு செய்ய வரும் திங்கள்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

News image
​கேரளத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது பற்றி முடிவு செய்ய வரும் திங்கள்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. (கோப்புப்படம்)
Updated On :23 ஜூலை 2020, 10:37 am

DIN


கேரளத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது பற்றி முடிவு செய்ய வரும் திங்கள்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

கேரளத்தில் ஜூலை 27-ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடவிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ரத்து செய்வதாக கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முடிவு செய்யப்பட்டது.

மேலும், மாநிலத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்தப்படுவது பற்றி முடிவெடுக்க வரும் திங்கள்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்த முடிவும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீப நாள்களாக பாதிப்புக்குள்ளாவோரில், குறிப்பிடத்தக்க சிலருக்கு எவ்வாறு கரோனா தொற்று ஏற்பட்டது என்பது கண்டறிய முடியவில்லை. இதன் காரணமாக, கேரளத்தில் சில பகுதிகளில் சமூகப் பரவல் ஏற்பட்டிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில், நேற்று முதன்முறையாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அங்கு ஆயிரத்தைத் தாண்டியது. இதைத் தொடர்ந்து, கேரளத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.