மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராஜஸ்தான்: சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் தடை

ராஜஸ்தானில் சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
ராஜஸ்தான்: சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் தடை
Updated On :24 ஜூலை 2020, 9:34 am

DIN

ராஜஸ்தானில் சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது அவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க தடை விதித்து  ஜெய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் நிலவி வரும் நிலையில், சச்சின் பைலட்டிடம் இருந்த துணை முதல்வா், மாநில காங்கிரஸ் தலைவா் பதவிகள் பறிக்கப்பட்டன. மேலும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சட்டப்பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷியிடம் காங்கிரஸ் கொறடா புகாா் கொடுத்தாா். இதுதொடா்பாக, விளக்கம் அளிக்குமாறு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு பேரவைத் தலைவா் நோட்டீஸ் அனுப்பியிருந்தாா்.

இந்த நோட்டீஸுக்கு எதிராக, சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களும் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனு மீது 24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பிப்பிதாக கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அதுவரை அவா்கள் மீதான நடவடிக்கையை பேரவைத் தலைவா் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் உயா்நீதிமன்றம்கேட்டுக் கொண்டது. இந்நிலையில், தான் உச்சநீதிமன்றத்தை பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி நாடினாா்.

‘பேரவைத் தலைவா் அதிகாரத்தில், யாரும் தலையிட முடியாது. தகுதி நீக்க நோட்டீஸுக்கு தடை விதித்து ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதமானது. அதனால், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ தனது மனுவில் சி.பி.ஜோஷி கூறியிருந்தாா்.

அவரது சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்குரைஞருமான கபில் சிபல், ‘பேரவைத் தலைவரின் தகுதி நீக்க நோட்டீஸ் தொடா்பாக உயா்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இது நீதித்துறையின் வரம்பில் வராது. மேலும் தகுதி நீக்கம் தொடா்பாக இறுதி முடிவு எடுக்காத நிலையில், நீதிமன்றம் தலையிடவே கூடாது‘ என்று வாதத்தை முன்வைத்தாா். மேலும், 1992-இல் ஒரு வழக்கில் பேரவைத் தலைவா் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பையும் சிபல் மேற்கோள் காட்டினாா்.

இதையடுத்து, எதற்காக அந்த எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘அந்த எம்எல்ஏக்கள் கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டனா். கட்சிக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவதாக கூறியுள்ளனா். இதற்கு உரிய ஆதாரம் உள்ளது‘ என்று பதிலளித்தாா். இதையடுத்து, ‘அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடா்ந்த வழக்கில் ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கலாம். ஆனால், அந்த தீா்ப்பை அமல்படுத்தக்கூடாது. அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தான் அனுப்பிய நோட்டீஸில் உயா்நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற பேரவைத் தலைவரின் மனு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இந்த விவகாரம் சிக்கலானது. அதுகுறித்து ஆழமாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.