

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,142 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,142 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,29,531 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,806 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று மேலும் 2,137 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,13,068 பேர் குணமடைந்துள்ளனர்.இன்றைய தேதியில் அங்கு 12,657 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் இன்று மட்டும் 20,509 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 9,29,244 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.