2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

கரோனா பாதிப்பு: ஆந்திரம், கர்நாடக மாநில நிலவரம்

​ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன.

News image
​ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. (கோப்புப்படம்)
Updated On :26 ஜூலை 2020, 1:46 pm

DIN


ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் புதிதாக 5,199 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 82 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 96,141 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,417 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 1,878 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம் இன்று 2,088 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 35,838 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு சிகிச்சையில் உள்ளவர்களில் 632 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம்:

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,627 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் 3,041 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 96,298 ஆக உயர்ந்துள்ளது. இதில் 46,301 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,041 பேர் பலியாகியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.