2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,431 பேருக்கு கரோனா: தாராவியில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு

​மகாராஷ்டிரத்தில் இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

News image
​மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது (கோப்புப்படம்)
Updated On :26 ஜூலை 2020, 2:54 pm

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,431 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 267 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,75,799 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,48,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,13,328 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 56.74 சதவிகிதமாக உள்ளது.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,115 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 57 பேர் பலியாகியுள்ளனர். 1,361 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,09,096 ஆக உயர்ந்துள்ளது. இதில் 80,238 பேர் குணமடைந்துள்ளனர், 6,090 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,531 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 113 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.