மகாராஷ்டிரத்தில் மேலும் 101 காவலர்களுக்கு கரோனா
மகாராஷ்டிர காவல்துறையில் இன்று புதிதாக 101 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8,584 காவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

101 new COVID-19 cases reported in Maharashtra Police

101 new COVID-19 cases reported in Maharashtra Police
மகாராஷ்டிர காவல்துறையில் இன்று புதிதாக 101 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8,584 காவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், கரோனா பாதித்த 6,538 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 94 காவலர்கள் பலியாகியுள்ளனர்.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது முதல் நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் அதிக பாதிப்புடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், வேறு மாநிலங்களில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிரத்தில் முன்களப் பணியாளர்களான காவல்துறையினருக்கு அதிகளவில் கரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் மொத்தம் 3,75,799 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,48,905 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதித்த 2,13,238 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 13,656 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...