கேரளத்தில் புதிதாக 702 பேருக்கு கரோனா: மேலும் 2 பேர் பலி
கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 702 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 702 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.
இதன்படி, அங்கு புதிதாக 702 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,727 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 10,049 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 9,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 18,417 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி கேரளத்தில் மொத்தம் 495 கரோனா ஹாட்ஸ்பாட்-கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...