/

பாகிஸ்தானில் புதிதாக 1,176 பேருக்கு தொற்று; பாதிப்பு 2,74,289 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் புதிதாக 1,176 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,74,289 ஆக அதிகரித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜூலை 2020, 11:12 am

DIN

பாகிஸ்தானில் புதிதாக 1,176 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,74,289 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானோர் குறித்த விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,176 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,74,289 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,842 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,41,026 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1,229 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 1,18,311, பஞ்சாப் - 92,073, கைபர்-பக்துன்க்வா- 33,397, இஸ்லாமாபாத் - 14,884, பலுசிஸ்தான்- 11,601, கில்கித்-பல்திஸ்தான்- 1,989 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 22,056 உள்பட இதுவரை 18,90,236 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.