நாட்டில் ஒரே நாளில் 47,703 பேருக்கு கரோனா; 654 பேர் பலி
நாடு முழுவதும் நேற்று புதிதாக 47,703 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரே நாளில் 47,703 பேருக்கு கரோனா; 654 பேர் பலி

நாட்டில் ஒரே நாளில் 47,703 பேருக்கு கரோனா; 654 பேர் பலி
நாடு முழுவதும் நேற்று புதிதாக 47,703 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தரவுகளின்படி செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 47,703 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,83,156 -ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 9,52,743 ஆக அதிகரித்தது. 4,96,988 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 654 போ் உயிரிழந்தனா். இதன் மூலமாக நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33,425-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் 64.25% ஆக உள்ளது. மரணமடைவோர் விகிதம் 2.25% ஆக உள்ளது.
இன்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டினரும் அடங்குவர். இன்று ஆறாவது நாளாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது 1,48,905 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 13,656 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் தமிழகத்தில் 53703 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3,494 பேர் மரணம் அடைந்துள்ளனர். தில்லியில் தற்போது சிகிச்சையில் 11,904 பேர் உள்ளனர். 3,827 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...