கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பொதுமுடக்கம்: கொல்கத்தா விமான நிலையம் ஏழு நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும்

மேற்கு வங்க மாநிலத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் ஏழு நாள்களுக்கும் கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
கொல்கத்தா விமான நிலையம் ஏழு நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும்
Updated On :30 ஜூலை 2020, 6:49 am

PTI


மேற்கு வங்க மாநிலத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் ஏழு நாள்களுக்கும் கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 5, 8, 16, 17, 23, 24, 31 ஆகிய ஏழு நாள்களுக்கும் கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்றும், அந்த நாள்களில் விமானப் பயணத்துக்கு முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், உரிய விமான சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயண தேதியை மாற்றியமைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில், வாரத்தில் இரு நாள்கள் மட்டும் முழு பொதுமுடக்கம் என்ற வகையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாள்களில் தற்போதைய நடைமுறை தொடரும் எனவும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

மேலும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று பொதுமுடக்கம் இருக்காது என்று கூறிய அவர், 'பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை திறக்கப்படாது. சூழ்நிலையைப் பொறுத்து செப்டம்பர் 5 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்படும்' என்றார். 

அறிவிப்பின்படி, மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 2, 5, 8, 9, 16, 17, 22, 23, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழு பொது முடக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாள்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.