மேற்கு வங்கம்: இனி கரோனாவால் பலியானவர்களின் உடலைப் பார்க்க உறவினர்களுக்கு அனுமதி
மேற்கு வங்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் வெள்ளிக்கிழமையன்று 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.


மேற்கு வங்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் வெள்ளிக்கிழமையன்று 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் புதிதாக மேற்கு வங்கத்தில் 427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 7,303 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 4 ஆயிரம் பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கு வங்கம் திரும்பி வருவதாகவும், கரோனா பரிசோதனையை அதிகரித்திருப்பதும், நாள்தோறும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்று மாநில நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சில மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கரோனா பாதித்து மரணம் அடைவோரின் உடலை, அவரது உறவினர்கள் பார்க்க அனுமதி அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுவரை, கரோனா பாதித்தவர்களின் உடலை உறவினர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், மரணம் அடைந்தவரின் உடலை வெளியே தெரியும் வகையில் மூடிவைத்து, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்று கரோனாவால் பலியானவரின் உடலை உறவினர்கள் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...