/

தொடர்ந்து 5ஆவது நாளாக 10ஆயிரத்தைத் தாண்டிய இந்தியாவில் கரோனா பாதிப்பு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,091 ஆக உயர்ந்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:48 pm

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,091 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நாட்டில் கரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து 5ஆவது நாளாக இன்றும் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 3,43,091 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகதாராத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,667 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் ஒட்மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,091 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில 380 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 9900 பேர் பலியாகியுள்ளனர். 

அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து 24 மணி நேரத்தில் 10,215 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,69,798லிருந்து 1,80,013 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,10,744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.