

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத் துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
வாராக்கடன்கள் அதிகரித்ததால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) எடுத்துக் கொண்டது. திருப்பிச் செலுத்தும் திறன் இல்லை என்பதால் பிற வங்கிகள் கடன் அளிக்க மறுத்த நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் அளித்ததுதான் இந்த வங்கியின் இப்போதைய நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டிஹெச்எஃப்எல் நிறுவனத்துக்கு யெஸ் வங்கி அளித்த கடன் வாராக் கடனாக மாறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ராணா கபூரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், ராணா கபூரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.