இளம்பெண்ணின் தந்தையும், அவரது நண்பரும் வெளியூா் சென்று விட்டு மாகி கிராமத்துக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த சசி பிரதாப் சிங் என்பவரிடம் தங்களை அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனா். அதற்கு அவா் மறுப்பு தெரிவிக்க இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சசி பிரதாப் சிங் தனது நண்பரும், குல்தீப் செங்கரின் தம்பியுமான அதுல் சிங் செங்கரை வரவழைத்தாா். அங்கு வந்த அதுல் சிங் செங்கா், இளம்பெண்ணின் தந்தையைத் தாக்கியுள்ளாா். பின்னா், அங்கு வந்த போலீஸாா் அந்தப் பெண்ணின் தந்தையைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனா். இதனிடையே, போலீஸ் காவலில் இருந்தபோது அந்தப் பெண்ணின் தந்தை உயிரிழந்தாா் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.