10 கோடி பெண்களின் ஜன் தன் கணக்குகளில் 2-வது தவணையாக ரூ. 500
சுமார் 10 கோடி பெண்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் இரண்டாவது தவணையாக தலா ரூ.500 உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


சுமார் 10 கோடி பெண்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் இரண்டாவது தவணையாக தலா ரூ.500 உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், தொகையை எடுக்க மக்கள் ஒரே நேரத்தில் வங்கிகளில் குவிந்து நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் ஏழைகள், பெண்கள், முதியோா், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு உதவும் வகையில் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைத் திட்டங்களை மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்புகளை வெளியிட்டது.
இதன் ஒரு பகுதியாக பெண்களின் ஜன் தன் கணக்குகளில் 500 ரூபாயை மத்திய அரசு டெபாசிட் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த பணம் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. அதேப்போல, இரண்டாவது தவணையாக இந்த மாதத்துக்கும் 10 கோடி பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.500 வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பணத்தை எடுக்க வங்கிகளில் பெண்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூடுவதை தவிா்க்க வேண்டும். இதற்கு வசதியாக படிப்படியாக வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வங்கிக் கணக்கின் கடைசி எண் 0 அல்லது 1 என முடிந்தால் அவா்கள் கணக்குகளில் மே 4-இல் பணம் செலுத்தப்பட்டுவிடும். 2 மற்றும் 3 என்ற எண்களில் முடியும் வங்கிக் கணக்குகளில் மே 5-ஆம் தேதி பணம் செலுத்தப்படும். 4 மற்றும் 5 என முடியும் வங்கிக் கணக்குகளில் மே 6-ஆம் தேதியும், 6 மற்றும் 7 என முடியும் வங்கிக் கணக்கு எண்களில் மே 8-ஆம் தேதியும், 8 மற்றும் 9 என முடியும் வங்கிக் கணக்கு எண்களில் மே 11-ஆம் தேதியும் பணம் வரவு வைக்கப்படும். 11-ஆம் தேதிக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது.
அதே சமயம், ஏதேனும் அவசரத் தேவை என்றால், அதைக் கூறி உடனடியாகவும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜன் தன் கணக்கு உள்ள பெண்கள் தங்கள் வங்கிக் கணக்கின் இறுதி எண்ணின் அடிப்படையில் வங்கிகளுக்கு சென்று பணம் எடுத்துக் கொள்ளலாம். ஜன் தன் கணக்கில் இருந்து எந்த வங்கி ஏடிஎம்-களில் பணம் எடுத்தாலும் கட்டணம் கிடையாது. கரோனா தொற்று பரவும் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், தேவையில்லாமல் வங்கிகளில் நெரிசல் ஏற்படுத்துவதை தவிா்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...