ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சூரத்திலிருந்து ஒடிசாவுக்குத் திரும்பிய 26 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 245

சூரத்திலிருந்து ஒடிசாவுக்குத் திரும்பிய 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 245 ஆக உயர்ந்துள்ளது

News image
Updated On :8 மே 2020, 5:35 am

PTI

புவனேஸ்வர்: சூரத்திலிருந்து ஒடிசாவுக்குத் திரும்பிய 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 245 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

கஞ்சாம் (19), கேந்திரபாரா (5) மற்றும் பத்ராக் (2) ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சூரத்தில் இருந்து வந்த இவர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கவைத்துள்ளனர் என்று அதிகாரி கூறியுள்ளார். 

கஞ்சாமில் பாதித்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே 2-ல் கரோனாவுக்கு முதல் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோன்று பத்ராக்கில் 23 ஆகவும், கேந்திரபாராவில் மொத்த பாதிப்பு 8 ஆகவும் உள்ளது. 

ஊரடங்கால் குஜராத்தின் சூரத் நகரில் சிக்கித் தவித்த ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதித்ததைத் தொடர்ந்து பேருந்துகள் மற்றும் ரயில்களில் கிழக்கு மாநிலத்திற்குத் திரும்பினர். 

கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஓடியா தொழிலாளர்கள் சூரத்தில் வைர வெட்டு, ஜவுளி மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வியாழக்கிழமை வரை 2,460 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் இதுவரை 52,974 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதித்துள்ளது.

பாதித்த 181 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 62 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை இரண்டு பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 34 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த எட்டு நாட்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.