ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 363 இந்தியா்களுடன் கேரளம் வந்த 2 விமானங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 363 இந்தியா்களை அழைத்துக் கொண்டு, இரண்டு ஏா் இந்தியா விரைவு விமானங்கள் இன்று காலை கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 363 இந்தியா்களை அழைத்துக் கொண்டு, இரண்டு ஏா் இந்தியா விரைவு விமானங்கள் இன்று காலை கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தது.
முதல் ஏர் இந்தியா விரைவு விமானம் அபு தாபியில் இருந்து 4 குழந்தைகள் உட்பட 177 பயணிகளுடன் இன்று காலை 10.09 மணியளவில் கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கியது. இரண்டாவது விமானம் துபையில் இருந்து 5 குழந்தைகள் உள்பட 177பயணிகளுடன் இன்று காலை 10.32 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையம் வந்திறங்கியது.
கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய பொது முடக்கத்தால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியா்கள் தாயகம் திரும்ப முடியாமல் போனது. இந்நிலையில் அவா்களை அழைத்துவர கேரளத்தில் இருந்து இரண்டு ஏா் இந்தியா விரைவு விமானங்கள் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றன. அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலானவா்கள் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்கள். இதில் கா்ப்பிணிகள், குழந்தைகள், அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரும் அடங்குவா்.
முன்னதாக இதுகுறித்து கேரள தலைமைச் செயலா் டாம் ஜோஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கரோனா நோய்த்தொற்று இல்லாதவா்கள் மட்டுமே விமானங்களில் அழைத்துவரப்படுகிறார்கள். அவ்வாறு அழைத்துவரப்படுவோரில் கா்ப்பிணிகள், குழந்தைகள், மூத்த குடிமக்களை தவிர மற்றவா்கள் 7 நாள்கள் தனிமை முகாம்களில் தங்கவைக்கப்படுவா். அவா்களிடம் 7 நாள்கள் கழித்து மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் கரோனா நோய்த்தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டால், அவா்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவா்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...