இந்தியாவில் ஒருநாளைக்கு 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன: ஐசிஎம்ஆர் தலைவர்
இந்தியாவில் ஒரு நாளைக்கு 1.1 லட்சம் கோவிட் - 19 மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதாக ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் ஒரு நாளைக்கு 1.1 லட்சம் கோவிட் - 19 மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதாக ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பல்ராம் பார்கவா இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:
"ஜனவரி மாதம் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைப் பரிசோதிப்பதற்கு இந்தியாவிடம் ஒரே ஒரு பரிசோதனை ஆய்வகம்தான் இருந்தது. பிப்ரவரி 28-இல் 14 அரசு ஆய்வகங்கள் இருந்தன. மார்ச் 31-இல் 125 அரசு ஆய்வகங்களும், 52 தனியார் ஆய்வகங்களும் இருந்தன. இன்று இந்தியாவிடம் 612 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் அரசு ஆய்வகங்கள் 430, தனியார் ஆய்வகங்கள் 182. கடந்த சில மாதங்களில் கரோனா பரிசோதனை அதிகரித்துள்ளது. ஒருநாளைக்கு 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் குறைந்த அளவிலேயே இறப்பு விகிதம் இருப்பது எங்களுக்கு ஆச்சரியமளித்தது. இது மிகவும் நல்ல விஷயம். ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறதா, இல்லையா என்பதைக் காட்டிலும், கரோனா தொற்றிலிருந்து ஒருவர் பிழைத்து வர வேண்டும். குறைந்த அளவிலான இறப்பு விகிதத்துக்கு பல்வேறு அனுமானங்கள் உள்ளன. நாம் சுகாதாரமற்ற முறையில் வாழ்வதால், நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக உள்ளது. நாம் சில ஊசிகளைப் போடுகிறோம். ஆனால், இவையனைத்தும் வெறும் அனுமானங்கள்தான்.
இந்தியாவில் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது, இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகையில் மொத்தம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், மற்ற நாடுகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உள்ளது. நாம் பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். கரோனாவை எதிர்கொள்வதில் இந்த நான்குதான் தூண்கள். இவற்றில் நாம் திறம்பட செயல்பட்டு வருகிறோம்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...