தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தாராவியில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று

தாராவியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 மே 2020, 3:46 pm

DIN


தாராவியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,190 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 56, 948 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 964 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,918 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் அங்கு மொத்தம் 37,125 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

தாராவியில் இன்று புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,639 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் பலியாகவில்லை. ஆனால், ஏற்கெனவே பலியான ஒருவரின் பெயர் இன்றைய பட்டியலில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து பலியானோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.