தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து வரும் அனைத்துப் போக்குவரத்துக்கும் தடை: கர்நாடகம்

மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகனங்களுக்குக் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 மே 2020, 1:26 pm

DIN


மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகனங்களுக்குக் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனிடையே மே 12 முதல் 15 ரயில்கள் (எதிர் தடத்தில் 15 ரயில்கள்) இயக்கப்பட்டன. இதையடுத்து சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு, உள்நாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

இந்த நிலையில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் புதன்கிழமை மதிய நிலவரப்படி, அதற்கு முந்தைய 19 மணி நேரத்தில் புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 122 பேரில் 108 பேர் மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.