/

கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் பட்டியலில்  இந்தியா தொடர்ந்து முன்னிலை

நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று 75 லட்சத்தைக் கடந்தது. இதனால் குணமடைந்தோர் பட்டியலில் உலகளவில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது

News image

கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் பட்டியலில்  இந்தியா தொடர்ந்து முன்னிலை

Updated On :2 நவம்பர் 2020, 11:24 am

புது தில்லி: நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று 75 லட்சத்தைக் கடந்தது. இதனால் குணமடைந்தோர் பட்டியலில் உலகளவில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

அடுத்த இடத்தில் இருக்கும் அமெரிக்காவோ, 61 லட்சம் பேருடனும், பிரேசில் 49 லட்சம் பேருடனும் குணமடைந்தோர் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 53,285 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டில் தற்போது 5,61,908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் உள்ள மொத்த பாதிப்பில், சிகிச்சை பெறுபவர்கள் 6.83% பேர் உள்ளனர். கடந்த 2 மாதத்தில், சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 3 மடங்குக்கு மேல் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 21.16 ஆக இருந்தது. 

நாட்டில் கடந்த ஜனவரி முதல், கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பரிசோதனை அதிகரிப்பு, பாதிக்கப்பட்டவர்களை விரைவில் கண்டறிந்து, ஏற்ற சிகிச்சை அளிக்க வழிவகுக்கிறது. இந்தியாவில் இன்று கரோனா பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 11 கோடியை (11,07,43,103) தாண்டியது.

2037 பரிசோதனை கூடங்கள் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன், நாட்டின் பரிசோதனை திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைவோர் விகிதம் 91.68% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,321 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 496 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்த இடத்தில் இருக்கும் அமெரிக்காவோ, 61 லட்சம் பேருடனும், பிரேசில் 49 லட்சம் பேருடனும் குணமடைந்தோர் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.