/

‘கரோனாவை டிரம்ப் சரியாகக் கையாளவில்லை’ - ஜெ.பி.நட்டா

பிகாரில் தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்காவில் கரோனா சூழ்நிலையை டிரம்ப் சரியாக கையாளவில்லை என ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.

News image
பிரசாரத்தில் பேசிய ஜெ.பி.நட்டா
Updated On :5 நவம்பர் 2020, 11:25 am

ANI

பிகாரில் தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்காவில் கரோனா சூழ்நிலையை டிரம்ப் சரியாக கையாளவில்லை என ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.

பிகார் சட்டப்பேரவையில் 3ம் கட்டத் தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடக்கவுள்ளது, இதற்காக தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தர்பங்கா தொகுதியில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா வியாழக்கிழமை பிரசாரம் செய்தார்.

இந்த பிரசாரத்தில் அவர் பேசுகையில்,

“அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் கரோனா சூழ்நிலையை சரியாக கையாள முடியவில்லை.

ஆனால் பிரதமர் மோடி சரியான நேரத்தில் முடிவெடுத்ததன் மூலம் 130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டை காப்பாற்றினார்” என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.