மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜவாஹர்லால் நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் ராகுல் மரியாதை

ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

News image
ஜவாஹர்லால் நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் ராகுல் மரியாதை
Updated On :14 நவம்பர் 2020, 6:09 am

DIN

ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாள் நாடு முழுவதும் குழந்தைகள் நாளாக இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

நேருவின் பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி நேருவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நேருவின் பிறந்தநாளையொட்டி சுட்டுரையில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, ''இந்தியா இன்று தனது முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாளை கொண்டாடுகிறது. 

சகோதரத்துவம், சமத்துவவாதம் மற்றும் நவீன கண்ணோட்டத்தின் மதிப்புகளுடன் நாட்டின் அடித்தளத்தை அமைத்த உயர்ந்த தொலைநோக்கு பார்வையாளர் நேரு. அவர் உருவாக்கிய இந்த மதிப்புகளைப் பாதுகாப்பதே எங்கள் முயற்சி'' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.