மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் படுக்கைகள் நிரம்பின

தில்லியில் கரோனா அச்சுறுத்தலுக்கிடையே வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்குப் பல்வேறு மருத்துவமனைகளில்  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
தில்லி: 60 மருத்துவமனைகளில் வென்டிலேட்டருடன் கூடிய படுக்கைக்கு பற்றாக்குறை (கோப்புப்படம்)
Updated On :19 நவம்பர் 2020, 12:47 pm

DIN

தில்லியில் கரோனா அச்சுறுத்தலுக்கிடையே வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்குப் பல்வேறு மருத்துவமனைகளில்  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்காலம் நெருங்கிவருவதால் காற்று மாசு மிகவும் மோசமடைந்து மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படுவதால், அதிக அளவிலான மக்கள் வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தில்லி அரசின் இணையதள கரோனா பட்டியலில் வியாழக்கிழமை 12.30 மணி நிலவரப்படி கரோனா பிரிவில் 131 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மட்டுமே காலியாக இருந்தன.  

ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் இருந்த 200 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் நிரம்பின. எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் இருந்த 200 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் 7 படுக்கைகள் மட்டுமே காலியாக இருந்தன.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்த 71 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் 7 படுக்கைகளும், சப்தர்ஜங் மருத்துவமனையிலுள்ள 65 ஐ.சியு. படுக்கைகளில் 7 படுக்கைகளும், சர் கங்கா ராம் மருத்துவமனையிலுள்ள 45 ஐ.சி.யு. படுக்கைகளில் 8 படுக்கைகளும் காலியாக இருந்தன.

ஆர்.எம்.எல். மருத்துவமனையில் ஒரு படுக்கையும், பி.எஸ்.ஏ. மருத்துவமனையில் 9 படுக்கைகளும், எஸ்.ஜி.எம்.எச் மருத்துவமனையில் 4 படுக்கைகளும் காலியாக இருந்தன.

தில்லி நகரில் கரோனா அல்லாத பிற சிகிச்சைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளும் மருத்துவமனைகளில் நிரம்பிவருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.