மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகள் பேரணி: தில்லி - நொய்டா எல்லையில் போக்குவரத்து நெரிசல்

வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ள நிலையில், வாகன சோதனையால் தில்லி - நொய்டா எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

News image
விவசாயிகள் போராட்டம்: தில்லி - நொய்டா எல்லையில் போக்குவரத்து நெரிசல்
Updated On :26 நவம்பர் 2020, 10:18 am

DIN

வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தில்லி காவல்துறையினரின் வாகன சோதனையால் தில்லி - நொய்டா எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று ஹரியாணா எல்லையான தில்லி - குருகிராம் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லி சாலோ என்ற பெயரில் பஞ்சாபிலிருந்து பேரணியாகச் சென்று தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். எனினும் பஞ்சாப் - ஹரியாணா எல்லைப் பகுதியான அம்பாலாவில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு தில்லி காவல்துறை அனுமதியளிக்காத நிலையில், அவர்களை எல்லையில் தடுத்து நிறுத்தும் பொருட்டு எல்லைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், உத்தரப்பிரதேச எல்லையான தில்லி - நொய்டா சாலையிலும், ஹரியாணா எல்லையான தில்லி - குருகிராம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.