மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி நோக்கி வரும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி செல்வோம் என்ற பெயரில் ஹரியாணா வழியாக தில்லி நோக்கி பேரணியாக வரும் விவசாயிகள் 

News image
தில்லி நோக்கி வரும் ஹரியாணா விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
Updated On :27 நவம்பர் 2020, 5:51 am

PTI


புது தில்லி: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி செல்வோம் என்ற பெயரில் ஹரியாணா வழியாக தில்லி நோக்கி பேரணியாக வரும் விவசாயிகள் மீது சிங்கு எல்லைப் பகுதியில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்தனர்.

தில்லியை ஹரியாணாவுடன் இணைக்கும் எல்லைப் பகுதியில், விவசாயிகள் மீது தில்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். 

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளைக் கலைக்க நாங்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினோம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தில்லியின் எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தில்லியில்  பாராட்டம் நடத்தவோ, பேரணி செல்லவோ தடை விதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகளிடம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், விவசாயிகள் தில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி அவர்கள் உள்ளே நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள கூறியுள்ளனர்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகா் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளதால், தில்லி மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தில்லியின் எல்லைப் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை அண்மையில் கொண்டுவந்து சட்டமாக்கியது.

இந்த சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகளும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். இவா்கள், வியாழக்கிழமை தில்லி நோக்கி பேரணியாகப் புறப்பட்டனா்.

ஹரியாணா மாநிலம் வழியாக தில்லியை அடைந்து தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளனா். இந்நிலையில், இவா்களை ஹரியாணா எல்லையான அம்பாலா பகுதியில் அம்மாநில காவல்துறையினர் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், விவசாயிகளின் பேரணியையொட்டி தில்லி எல்லையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்த பிறகே தில்லியினுள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், தில்லி- உத்தரப்பிரதேசம், தில்லி-ஹரியாணா எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.