மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகள் பேரணி: காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்த தில்லி அரசு

தில்லியை நோக்கிய விவசாயிகளின் பேரணியைத் தொடர்ந்து 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாகப் பயன்படுத்த அனுமதி கோரிய தில்லி காவல்துறையின் கோரிக்கையை மாநில அரசு நிராகரித்துள்ளது.

News image
விவசாயிகள் பேரணி: காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்த தில்லி அரசு
Updated On :27 நவம்பர் 2020, 7:53 am

DIN

தில்லியை நோக்கிய விவசாயிகளின் பேரணியைத் தொடர்ந்து 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாகப் பயன்படுத்த அனுமதி கோரிய தில்லி காவல்துறையின் கோரிக்கையை மாநில அரசு நிராகரித்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகா் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளதால், தில்லி மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தில்லியை ஹரியாணாவுடன் இணைக்கும் எல்லைப் பகுதியில் திரண்ட விவசாயிகள் மீது தில்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். தொடர்ந்து தில்லியின் எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், விவசாயிகள் தில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி அவர்கள் உள்ளே நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளின் பேரணியையொட்டி தில்லி எல்லையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பேரணியைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வரும் தில்லி காவல்துறை தில்லியில் உள்ள 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாகப் பயன்படுத்த மாநில அரசிடம் அனுமதி கோரியது.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாக மாற்ற அனுமதி கோரிய தில்லி காவல்துறையின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்தது.

முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த கேஜரிவால் விவசாயிகள் பேரணியைத் தடுக்க கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.