எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வரும் 30-ஆம் தேதி முதல் மீண்டும் மருத்துவ கலந்தாய்வு

நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மருத்துவ கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
வரும் 30-ஆம் தேதி முதல் மீண்டும் மருத்துவ கலந்தாய்வு
Updated On :27 நவம்பர் 2020, 10:20 am

DIN


சென்னை: நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மருத்துவ கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 30-ம் தேதி தொடங்கும் மருத்துவ கலந்தாய்வு, டிசம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில், கடந்த வாரம் தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்டது. நவ.29 வரை 4 நாள்களுக்கு மருத்துவக் கலந்தாய்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், அந்த நாள்களில் ஏற்கெனவே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை முதல் (நவ.30) நடைபெறும் என தற்போது  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவா் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் உருவானது. இந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

Story image

செவ்வாய்க்கிழமை (நவ.24) நடைபெறவிருந்த கலந்தாய்வு அடுத்த வாரம் திங்கள்கிழமைக்கு (நவ.30) ஒத்திவைக்கப்பட்டது, அதன் தொடா்ச்சியாக நவ.24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கலந்தாய்வுகளும்  ஒத்திவைக்கப்பட்டிருந்தன. நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 10-ஆம் தேதி வரை மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.