மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘விவசாயிகளை எதிரிகளாகக் கருதும் மத்திய அரசு’: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர்

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீதான் தாக்குதலின் மூலம் மத்திய அரசு விவசாயிகளை தங்களது விரோதிகளாகக் கருதுவது தெரியவருவதாக முன்னாள் மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கெளர் தெரிவித்துள்ளார்.

News image
முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர்
Updated On :27 நவம்பர் 2020, 7:22 am

DIN

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீதான் தாக்குதலின் மூலம் மத்திய அரசு விவசாயிகளை தங்களது விரோதிகளாகக் கருதுவது தெரிய வருவதாக முன்னாள் மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கெளர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி செல்வோம் என்ற பெயரில் ஹரியாணா வழியாக தில்லி நோக்கி பேரணியாக வரும் விவசாயிகள் மீது சிங்கு எல்லைப் பகுதியில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்தனர்.

தில்லியை ஹரியாணாவுடன் இணைக்கும் எல்லைப் பகுதியில், விவசாயிகள் மீது தில்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். 

இந்நிலையில் சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கெளர் மத்திய பாஜக அரசு விவசாயிகளை எதிரிகளாக கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு தினத்தன்று விவசாயிகளின் மீது மத்திய அரசு தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த கெளர் இது நாட்டின் விவசாயிகளுக்கு ஒரு கருப்பு நாளாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.  

மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கெளர் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.