மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உன்னாவ் பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் காலமானார்

​உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் மகேந்திர சிங் திங்கள்கிழமை காலமானார்.

News image
விபத்தில் காயமடைந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் உயர் சிகிச்சைக்காக தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டபோது..
Updated On :30 நவம்பர் 2020, 10:54 am

DIN


உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் மகேந்திர சிங் திங்கள்கிழமை காலமானார்.

உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞர் மகேந்திர சிங்கும் கடந்தாண்டு ஜூலை மாதம் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இருவரும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் 2 மாதங்களில் வீடு திரும்பினார்.

இதையடுத்து வழக்கறிஞர் மகேந்திர சிங், வீட்டிற்கு அனுப்பப்பட்டு முழு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.

அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கையில், "ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாவட்ட மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு உடல் உறுப்புகள் செயல்படாததன் காரணமாக அவர் திங்கள்கிழமை காலமானார்.

அவரது இளைய சகோதரர் பிங்கு தெரிவிக்கையில், "அந்த விபத்திலிருந்து அவர் மீளவே இல்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.