வேளாண் சட்டங்களுக்கு எதிராக அக்.27இல் கூடும் சத்தீஸ்கர் சிறப்பு பேரவைக் கூட்டம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அக்டோபர் 27ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை

சத்தீஸ்கர் மாநிலத்தில் அக்டோபர் 27ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் சட்டமன்ற கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு மாநில அரசின் முன்மொழிவை சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா யுகே திருப்பி அனுப்பி இருந்தார். மாநில அரசு அளித்த பதிலைத் தொடர்ந்து ஆளுநர் ஒப்புதல் அளித்து புதன்கிழமை உத்தரவிட்டார்.

இந்நிலையில் சட்டப்பேரவை செயலர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய இரு தேதிகளில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசு தீர்மானம் மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவமாறு காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பஞ்சாப் மாநில அரசு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com