கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைவு
கரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வரும் போக்கை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.


புது தில்லி: கரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வரும் போக்கை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாம் நாளாக கரோனா தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 7.5 லட்சத்துக்கும் கீழே குறைந்து உள்ளது. ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான கரோனா நோயாளிகள் குணம் அடைந்து வருகின்றனர். குணம் அடைவோரின் நிலையான போக்கும், தினசரி குணம் அடைவோர் அதிக எண்ணிக்கையில் இருப்பதும் தொடர்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 61,775 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,83,608 பேருக்குத் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிதாக தொற்றுப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54,044 ஆக இருக்கிறது.
சோதனை, கரோனா பாதித்தோரை கண்டுபிடிப்பது மற்றும் சிகிச்சை உத்தியை வெற்றிகரமாக அமல்படுத்துவதுடன் உரிய நேரத்தில் போதுமான சிகிச்சை அளிப்பது இறப்போர் விகிதத்தில் சரிவை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் உயிரிழப்போர் விகிதம் இன்றைக்கு 1.51% ஆக குறைந்திருக்கிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டோர் உயிரிழப்பு விகிதத்தை 1% கீழே குறைக்கும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இப்போது 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 1%-க்கும் குறைவாக உள்ளது.
இந்தியா முழுவதும் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை இன்றைக்கு 67,95.103 ஆக இருக்கிறது. தொடர்ந்து தினந்தோறும் அதிகமானோர் குணம் அடைந்துவருவதன் விளைவாக தேசிய அளவில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அது 89% க்கு நெருக்கமாக இருக்கிறது.(88.81%) 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மட்டும் புதிதாக குணம் அடைந்தோரின் விகிதம் 77% ஆக இருக்கிறது. மகாராஷ்டிரத்தை மிஞ்சும் அளவுக்கு கர்நாடகத்தில் புதிதாக குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 8,500 –க்கும் அதிகமாக இருக்கிறது.
மகாராஷ்டிரம், கேரள மாநிலங்களில் புதிதாக குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 7000-த்துக்கும் அதிகமாக இருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 78 % பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மட்டும் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 8000-த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடகம், கேரளம் என இரண்டு மாநிலங்களிலும் 6000-த்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 717 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 82% இறப்புகள் பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் நேற்று மட்டும் 213 பேர் உயிரிழந்துள்ளனர். இது 29 % ஆகும். கர்நாடகத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...