அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாட்டில் கடந்த 9 நாள்களில் 1 கோடி கரோனா பரிசோதனை

நாட்டில் கடந்த 9 நாள்களில் 1 கோடி கரோனா பரிசோதனைகளை இந்தியா செய்துள்ளது, ஆறு வாரங்களில் தினமும் சுமார் 11 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

News image
நாட்டில் கடந்த 9 நாள்களில் 1 கோடி கரோனா பரிசோதனை
Updated On :29 அக்டோபர் 2020, 10:33 am

ANI

புது தில்லி: நாட்டில் கடந்த 9 நாள்களில் 1 கோடி கரோனா பரிசோதனைகளை இந்தியா செய்துள்ளது, ஆறு வாரங்களில் தினமும் சுமார் 11 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 2020-இல் இருந்து கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பரிசோதனைகளுக்கான சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 9 நாட்களில் மட்டும் 1 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆறு வாரங்களில் தினமும் சுமார் 11 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தினமும் 15 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் அளவுக்கு இந்தியா தயாராக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,75,760 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இது வரை மொத்தம் 10.65 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (10,65,63,440). தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் இன்று 7.54 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர் பரிசோதனைகள், கண்காணிப்பு மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 6,03,687 ஆக உள்ளது. மொத்த மதிப்புகளில் இது வெறும் 7.51 சதவீதம் ஆகும். இது வரை 73 லட்சத்துக்கும் அதிகமானோர் (73,15,989) குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56,480 பேர் குணமடைந்துள்ளனர். புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 49,881 ஆக உள்ளது. குணமடைந்தவர்களில் 79 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.