மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, பிராணயாமம் : மோடி
மன அழுத்தத்தைக் குறைக்க யோகாவும் பிராணயாமமும் உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


புது தில்லி: மன அழுத்தத்தைக் குறைக்க யோகாவும் பிராணயாமமும் உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சி முடித்த புதிய 131 ஐபிஎஸ் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமா் மோடி இன்று உரையாடினார்.
ஹைதராபாதில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய காவல்துறை அகாதெமியில் 42 வார பயிற்சியை 28 பெண்கள் உள்பட 131 ஐபிஎஸ் அதிகாரிகள் முடித்துள்ளனா். அவா்களுடன் பிரதமா் மோடி இன்று காலை காணொலி வாயிலாக உரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில், பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் போன்றவை விவசாயிகள் உள்பட அனைத்துத் துறையினருக்கும் இருக்கும். இது வாழ்வின் ஒரு பகுதி, ஆனால் எதிர்கொள்ள முடியாத ஒரு விஷயம் அல்ல, நமது தேவைகள் மற்றும் பொறுப்புகளை நாம் புரிந்து கொண்டோமேயானால், நமது பிரச்னைகளை நாம் எளிதாகக் கையாளலாம்.
உங்களது பணியில், எதிர்பாராத பல சிக்கல்கள் ஏற்படலாம், அதை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பணிக்காக வெளியே செல்லும் போது, மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடுங்கள், ஆசிரியராக இருந்தாலும், அவரது பாடம் தொடர்பாக பேசுவதைக் கேளுங்கள். இது உங்களது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். அதே சமயம் யோகாவும், பிராணயாமமும் தொடர்ந்து மேற்கொண்டால் உங்கள் தன்னம்பிக்கை வளரும், எப்போதுமே மன அழுத்தத்துக்கு ஆளாகாமல், மிக மகிழ்ச்சியோடு வாழலாம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...