/

ஹைபர்சானிக் தொழில்நுட்ப சோதனை வெற்றி: பிரதமர் பாராட்டு

ஹைபர்சானிக் தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டிஆர்டிஓ) பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 செப்டம்பர் 2020, 4:12 pm

DIN


ஹைபர்சானிக் தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டிஆர்டிஓ) பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒலியைவிட 6 மடங்கு அதிவேகத்தில் ஏவும் திறன் கொண்ட ஹைபர்சானிக் தொழில்நுட்பத்தின் சோதனையை டிஆர்டிஓ இன்று (திங்கள்கிழமை) ஒடிசாவில் மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிந்தன. அமெரிக்கா, சீனா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்த தொழில்நுட்பத்தைப் பெறும் 4-வது நாடு இந்தியா.

இந்த நிலையில், பிரதமர் மோடி இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"ஹைபர்சானிக் சோதனை இன்று வெற்றியடைந்ததற்கு டிஆர்டிஓ-க்கு பாராட்டுகள். ஒலியைவிட 6 மடங்கு அதிவேகமாக ஏவுவதற்கு, நமது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்கராம்ஜெட் என்ஜின், உதவியுள்ளது. இன்றைய தேதியில் வெகுசில நாடுகளிடம் மட்டுமே இந்தத் திறன் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.