/

பாஜக இணையப் பிரிவுக்கு எதிராக திரும்பும் சுப்பிரமணியன் சுவாமி

பாஜகவின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பாஜக இணையப் பிரிவு தலைவரை உடனடியாக நீக்க  கட்சித் தலைமைக்கு கெடு விதித்துள்ளார்.

News image
பாஜகவின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
Updated On :27 ஜனவரி 2024, 5:17 pm

DIN

பாஜகவின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பாஜக இணையப் பிரிவு தலைவரை உடனடியாக நீக்க  கட்சித் தலைமைக்கு கெடு விதித்துள்ளார்.

பாஜகவின் மூத்தத் தலைவராக இருப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் அவ்வப்போது பாஜகவிற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது சுட்டுரைப் பதிவில் பாஜக இணையப் பிரிவினரால் போலியான டிவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு  தன்னைக் குறித்து தவறாக தகவல்கள் பதிவிடப்பட்டு வருவதாகத் புகார்  தெரிவித்திருந்தார்.

பரபரப்பைக் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமியின் இந்தப் பதிவால் பாஜக கட்சியினர் கலக்கமடைந்தனர். இந்நிலையில் பாஜக இணையப் பிரிவுத் தலைவர் அமித் மாலவியா மீது கட்சித் தலைமை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை பதிவிட்டுள்ள தனது சுட்டுரைப் பதிவில், “நாளைக்குள் (வியாழக்கிழமை) மாலவியா பாஜக இணையப்பிரிவிலிருந்து நீக்கப்படாவிட்டால் பாரதிய ஜனதா கட்சி தன்னை ஆதரிக்கவில்லை எனக் கருத வேண்டிய நிலை ஏற்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “மாலவியா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தன்னைக் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்படுவேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.