இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பங்கஜ் புச் கூறுகையில், "சில வாரங்களுக்கு முன்பு பிரபாஷங்கர் பாட்டீல் என்பவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளும் உள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் அவர் "மனநலம் பாதிக்கப்பட்டவர்" என்று மருத்துவமனையின் மனநலத் துறை அளித்த கருத்தின் படி, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையின் மனநலத் துறை அளித்த கருத்தின் படி, அந்த விடியோ படமாக்கப்பட்ட நேரத்தில், அவருக்கு வெறி ஏற்பட்டதை அடுத்து அவர் அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கினார். மேலும் தன்னையும் பிற நோயாளிகளையும் தாக்க முயன்றார். பணியில் இருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் முன் தனது ஆடைகளை அகற்றி, தனக்கும் சக நோயாளிகளுக்கும் பாதிப்பு உண்டாக்கும் விதத்தில் நடந்துகொண்டார். அதைத் தடுத்து நிறுத்துவதற்காக செவிலியர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் அவரை அப்படி செய்யக்கூடாது என்று கண்டித்துள்ளனர். ஆனால் அவர் கேட்காமல் வெறியுடன் நடந்து கொண்டார். அதனால் தான் அவரை அப்படி மடக்கி தடுத்து நிறுத்தியதாக டாக்டர் பங்கஜ் புச் தெரிவித்துள்ளார்.