மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பைலட் கையில் எதுவும் இல்லை, எல்லாம் பாஜக ஏற்பாடு: கெலாட்

ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டது குறித்து பேசிய முதல்வர் அசோக் கெலாட், அனைத்தும் பாஜக ஏற்பாடு என குற்றம்சாட்டியுள்ளார்.

News image
ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டது குறித்து பேசிய முதல்வர் அசோக் கெலாட், அனைத்தும் பாஜக ஏற்பாடு என குற்றம்சாட்டியுள்ளார்.
Updated On :14 ஜூலை 2020, 11:23 am

DIN


ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டது குறித்து பேசிய முதல்வர் அசோக் கெலாட், அனைத்தும் பாஜக ஏற்பாடு என குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து சச்சின் பைலட்டை நீக்குவது குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதன்படி, ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்தும், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு கெலாட் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

"மத்தியப் பிரதேசத்தில் செய்ததையே இங்கும் செய்ய பாஜக விரும்புகிறது. ஆனால், ராஜஸ்தானில் பாஜகவின் நோக்கம் பலிக்காது. சச்சின் பைலட், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களுக்கு போதிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், திங்கள் மற்றும் செவ்வாயன்று நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.

சச்சின் பைலட் கையில் எதுவும் இல்லை. அனைத்து ஏற்பாடுகளையும் பாஜகதான் செய்கிறது. குதிரைப் பேரம் நடைபெறுவது வருத்தமளிக்கிறது." என்றார் கெலாட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.