மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடங்கியது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் நாளை 8-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து எல்லைகளிலும் டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
கிழக்கு, மேற்கு தில்லி உள்பட தில்லியின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் பேரணியையொட்டி ஹரியாணாவின் குண்லி, மானேசர், பல்வால் ஆகிய தேசிய நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிராக்டர் பேரணி நடைபெறும் சாலைகளில் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டிராக்டர் பேரணியை விடியோவாக பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள பாரதிய கிஸான் யூனியன் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் டிகத் கூறியதாவது, ''ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினவிழாவில் நடைபெறும் டிராக்டர் பேரணியின் முன்னோட்டமாக இந்த பேரணி நடைபெறுகிறது. நாளை மத்திய அரசுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமைச்சா் கீா்த்தனாவுக்கு கீதாஜீவன் கண்டனம்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தொழில் முன்னோடிகள் திட்ட விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு
காவல் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: 2 போ் கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



