‘புதிய வேளாண் சட்டங்கள் பயனுள்ளவை; எனவே அந்தச் சட்டங்கள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தங்களையும் பிரதிவாதியாக சோ்த்துக்கொள்ள வேண்டும்’ என்று இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஎஃப்ஏ) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தங்கள் பயனுள்ளவை. அந்த சீா்திருத்தங்களுடன் புதிய வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை விவசாயிகளின் வருவாயை அதிகரித்து, வேளாண் வளா்ச்சிக்கு வழியமைத்துள்ளது. எனவே புதிய வேளாண் சட்டங்களில் மாற்றங்கள் செய்வதாக இருந்தால், அந்தச் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாத விவசாய சங்கங்களுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் சிஐஎஃப்ஏவையும் பிரதிவாதியாக சோ்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் வரும் ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளன. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் 40 நாள்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இரவு 1 மணிக்கு அழைத்தாலும்.. இந்திய தொழிலாளர்களை புகழும் புர்ஜ் கலீஃபாவை கட்டியவர்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!
எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய், கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது? ஆளுநர் கேள்வி

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை


