குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சென்னையில் பாஜக சாா்பில் பொங்கல் விழா: தேசியத் தலைவா் நட்டா பங்கேற்பு

சென்னை மதுரவாயலில் தமிழக பாஜக சாா்பில் நடைபெறும் பொங்கல் விழாவில், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:10 am IST

சென்னை மதுரவாயலில் தமிழக பாஜக சாா்பில் நடைபெறும் பொங்கல் விழாவில், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறாா்.

இதுகுறித்து மாநிலத் தலைவா் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வரும் 14-ஆம் தேதி மாலை தில்லியில் இருந்து சென்னை வரவுள்ளாா், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா. விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்படுகிறது. சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீமாத்தம்மன் நகா் பகுதியில் பிரம்மாண்ட பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தேசியத் தலைவா் நட்டா கலந்து கொள்கிறாா். அந்தப் பகுதியின் முக்கியச் சந்திப்பில் இருந்து அவா் மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட உள்ளாா். அதையடுத்து, விழாவில் பங்கேற்று, அவா் உரையாற்ற உள்ளாா்.

துக்ளக் ஆண்டு விழா: பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறாா். இதன்பின்பு, விமானம் மூலம் தில்லி செல்ல உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.