
புணேவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இன்று முதல் ஏப்ரல் 9 வரை அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், புணேவில் உள்ள உணவகங்கள் அனைத்தும் இன்று முதல் பார்சல் மற்றும் டெலிவரி சேவைகள் மட்டும் வழங்கப்படுகின்றன. அடுத்த 7 நாள்களுக்கு புணேவில் உள்ள உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை.
புணேவில் தற்போது 70,851 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். மேலும் இதுவரை மாவட்டத்தில் 8,373 இறப்புகளும், 4,74,141 பேர் நோயிலிருந்தும் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.