புது தில்லி: புது தில்லியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது, அதே வேளையில் விரைவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புது தில்லியிலும் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தில்லியில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தலைநகர் தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், ஒரு வேளை நம்மிடம் தேவையான தடுப்பூசி இருந்து, வயது வரம்பு தளர்த்தப்பட்டால், 2 - 3 மாதங்களில் தில்லியில் தடுப்பூசி போடும் திட்டம் நிறைவு பெறும். தற்போது நம்மிடம் வெறும் 7 - 10 நாள்களுக்கு மட்டுமே போடும் அளவுக்கு தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி போட வயது வரம்பை நீக்க வேண்டும். கரோனா அதிகரித்து வரும் நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது. புதிய கட்டுப்பாடகள் மட்டும் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளர்ந்த இந்தியாவின் வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடி

மேற்கு வங்க தேர்தல்: ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது - ஆளுநர் ஆர்.என். ரவி

விசிலுக்கென ஒரு சத்தம் இருக்கு அதைத் தாண்டி சத்தம் வராது! - தமிழிசை

ஆலியா பட் பிடிக்கும்; ஆனால்... சாரா அர்ஜுன் 9 வயதில் பேசிய விடியோ வைரல்!
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


