எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

'நாட்டில் ஒருபோதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது'

நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வந்தாலும், ஒரு போதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.

News image
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Updated On :14 ஏப்ரல் 2021, 8:02 am

DIN


நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வந்தாலும், ஒரு போதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மிகப்பெரிய நடவடிக்கையாக பொதுமுடக்கத்தை மத்திய அரசு அமல்படுத்தாது என்றும், மக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் கூடுவதைத் தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகள்தான் பிறப்பிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

உலக வங்கி குழு தலைவர் டேவிட் மால்பாஸ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இந்தியாவில் கரோனா பரவல் மற்றும் அதனைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறுகையில், கரோனா தொற்று மோசமான நிலையில் இருந்தாலும், பெரிய அளவில் கடந்த காலத்தைப் போல பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று கூறினார்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதாவது, பரிசோதனையை அதிகரிப்பது, நோய் பாதிப்பைக் கண்டறிதல், உடனடி சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்துதல், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடத்தை விதிகளை அதிகரித்தல் ஆகியவற்றை செயல்படுத்தி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.