நாட்டில் இதுவரை இல்லாத அளவில் கரோனா பாதிப்பு
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக புதிதாக 3,46,786 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,624 பேர் கரோனாவுக்குப் பலியாகினர்.


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக புதிதாக 3,46,786 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,624 பேர் கரோனாவுக்குப் பலியாகினர்.
நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 2,624 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,89,544 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 3.46 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,66,10,481 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கரோனா பாதித்த 2,624 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,89,544 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2.16 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,38,67,997. தற்போது 25,52,941 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 13,83,79,832 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...