'கோவிஷீல்டு தடுப்பூசிகள் மற்றும் கரோனாவிலிருந்து மீண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் டெல்டா மாறுபாட்டின் நடுநிலைப்படுத்தல்' என்ற தலைப்பில் இந்த நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து சோதனை செய்யப்பட்டது. இதில் கரோனாவிலிருந்து மீண்டு இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி, கப்பா மற்றும் டெல்டா வகை கரோனாவை எதிர்கொள்வதாக இருந்தது. மேலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு டெல்டா பிளஸ் வைரஸின் தாக்கம் குறைவாக இருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.