‘சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது’: பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் அமைதியும் வளர்ச்சியும் திரும்பி வருவதாக பிரதமர் மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.


சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் அமைதியும் வளர்ச்சியும் திரும்பி வருவதாக பிரதமர் மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன.
இதையும் படிக்க | பெகாஸஸ் உளவு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
இந்நிலையில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை குறிப்பிட்டு பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ராகுல்காந்தி போராட்டம்
"இது வரலாற்று சிறப்புமிக்க தினம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மிக முக்கியமான அடியை இன்றைய புதிய ஜம்மு-காஷ்மீர் எடுத்து வைத்திருந்தது. அதன்மூலம் தற்போது இதற்கு முன் இல்லாத அமைதியும், வளர்ச்சியும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...